Friday, April 10, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவட்டி வீதங்கள் அதிகரிப்பு?

வட்டி வீதங்கள் அதிகரிப்பு?

அரசாங்கத்திற்கு சொந்தமான வணிக வங்கிகள் இதுவரை வழங்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க பல அரச வங்கிகள் நேற்று முன் தினம் நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரியவருகிறது.

அதன்படி வாடிக்கையாளரின் கடன் வசதிகளுக்கான வட்டி வீதங்கள் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அத்துடன், இந்த வட்டி அதிகரிப்பானது டிசம்பர் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையான வட்டி வீதத்தில் பெறப்படும் கடனுக்கும் இந்த வட்டி உயர்வு பொருந்தும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இரண்டு வருடங்களுக்கும் குறைவான நிலையான வட்டி வீதங்களின் கீழ் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதங்கள் 3% அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், பழைய கடன் வசதிகளுக்கான வட்டி விகிதங்கள் 15% ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles