முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது ஆட்சிக்காலத்தில் சீனி இறக்குமதிக்கான தீர்வை கிலோவுக்கு 50 ரூபாவில் இருந்து 25 சதமாக குறைக்கப்பட்டது.
இதனால் அரசாங்கத்துக்கு 16 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டதாக, நிதி இராஜாங்க அமைச்சா ரஞ்சித் சியம்பலாபிட்டிய அண்மையில் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை விசாரணை செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேநேரம் அந்த காலத்தில் வர்த்தக அமைச்சராக இருந்த பந்துல குணவர்தனவையும் விசாரணைக்கு அழைத்துள்ள போதும்இ அவர் வேறொரு திகதியை கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.