Monday, September 22, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ்ப்பாண மாநகர சபை வரவு செலவுத்திட்டம் தோல்வி

யாழ்ப்பாண மாநகர சபை வரவு செலவுத்திட்டம் தோல்வி

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 7 மேலதிக வாக்குகளால் தோல்வியுற்றது.

மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் இன்று (21) வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் பதிவாகின.

கடந்த காலங்களில் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவளித்து வந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வாக்கெடப்பில் பங்குபற்றாமையே தோல்விக்கான காரணம் என கூறப்படுகிறது.

45 யாழ் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் – 45

இலங்கை தமிழரசுக் கட்சி – 16

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 13

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 10

ஐக்கிய தேசியக் கட்சி – 3

சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 2

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles