Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐஸ் கடத்தலின் பிரதான மையம் இலங்கையாம்

ஐஸ் கடத்தலின் பிரதான மையம் இலங்கையாம்

ஐஸ் அல்லது கிரிஸ்டல் மெத் எனப்படும் போதைப்பொருள் கடத்தலின் பிரதான மையமாக இலங்கை மாறியுள்ளதாக இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்டர்போல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

22 நாடுகளுக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருள் 500 பேர்போன பார்ச்சூன் நிறுவனங்களுக்கு சமமான கிரிமினல் கும்பல்களால் கடத்தப்படுவதாக இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜூர்கன் ஸ்டாக் தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் ஐஸ் மருந்துகள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுவதாகவும், பல புதிய போதைப்பொருள் போக்குவரத்து வழிகள் உருவாகியிருப்பதாகவும் இன்டர்போல் கூறுகிறது.

இந்த ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மிகவும் தீங்கு விளைவிப்பவை என தெரியவந்துள்ளதுடன், ஐஸ் போதைப்பொருளில் கடத்தலில் ஈடுபட்ட 24 இலங்கையர்கள் வெளிநாடுகளில் பதுங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

#Infosrilanka

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles