Tuesday, March 18, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடயனாவின் கடவுச்சீட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

டயனாவின் கடவுச்சீட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் கமகே பிரித்தானிய பிரஜாவுரிமையை வைத்திருப்பதாகவும் அதனால் இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு எதிரானது எனவும் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையானது அதிகார துஷ்பிரயோகம் எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தும் பல மனுக்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles