கட்டுகெந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 32 சட்டவிரோத மதுபான பீப்பாய்களையும், கெப் ரக வண்டியொன்றையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
படல்கம காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.