பொரளை மயானத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் CCTV அமைப்பு பொருத்தப்பட உள்ளதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
முதலில் கொழும்பு மாநகர சபையின் நிதிக் குழுவில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவோம்.
அதன் பின்னர் பொதுச் சபையில் அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மயானம் தொடர்பான சில நடவடிக்கைகள் மாத்திரமே ரக்னா லங்கா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் கொலையை தொடர்ந்து, சிசிடிவியை சரிசெய்ய முடிவு செய்யப்பட்டது.