Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமியன்மார் பிரஜைகளை தடுத்து வைக்க உத்தரவு

மியன்மார் பிரஜைகளை தடுத்து வைக்க உத்தரவு

வடக்கு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மியன்மார் பிரஜைகளுடன் மீட்கப்பட்ட அகதிகள் படகின் படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காங்கேசன்துறை கடற்படைத் தளத்தை அண்மித்த தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் பொலிஸ் பாதுகாப்பின் கீழிருந்த மியன்மார் அகதிகளை, மல்லாகம் நீதவான் நேற்று(19) மாலை பார்வையிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது, படகிலிருந்து மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகளை சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அவர்கள் பாதுகாப்பான முறையில் தடுத்து வைக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles