இந்தியாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் கடனை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான கோரிக்கையை பசில் ராஜபக்ஷ அந்நாட்டு அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளார் என அறியமுடிகிறது.
ஏற்கனவே இந்தியா இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக 500 மில்லியன் டொலர் தருகின்ற நிலையில், அதனை 750 மில்லியனாக உயர்த்த கோரப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெறும் ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளது.