வரி திருத்தங்களால் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலைகள் 400 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்ற கூற்றை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மறுத்துள்ளார்.
விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு அரசாங்கம் VAT அல்லது சுங்க வரியை அறவிடுவதில்லை என்பதால், இவ்வாறான கூற்றுக்களில் எந்த அடிப்படையும் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே புதிய வரிக் கொள்கையினால் விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகள் அதிகரிக்கப்படாது என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய வரித் திருத்தங்களைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகள் 400 வீதத்தால் அதிகரிக்கப்படும் எனவும், அதனால் அத்தகைய நபர்களின் ஆயுட்காலம் 50 வருடங்களாகக் குறையும் என சில தரப்பினரின் கூற்றுக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.