Friday, November 15, 2024
30 C
Colombo
செய்திகள்உலகம்கர்ப்பிணி மனைவிக்கு HIV ஊசியை செலுத்திய கணவர் கைது

கர்ப்பிணி மனைவிக்கு HIV ஊசியை செலுத்திய கணவர் கைது

இந்தியாவில் கர்ப்பிணி மனைவியை விவாகரத்து செய்வதற்காக அவரது உடலில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தத்தை ஊசிமூலம் செலுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரா மாநிலத்தின் தாடேபல்லே பிரதேசத்தில் சந்தேக நபர் (40) தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினை வர ஆரம்பித்துள்ளது.

அடிக்கடி வரதட்சனை பணம் கேட்டும், ஆண் குழந்தை வேண்டும் எனவும் அடித்து கணவன் துன்புறுத்துவதாக குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

அத்துடன் சத்து ஊசி என தெரிவித்து, எச்.ஐ.வி பாதித்த ஒருவரின் இரத்தத்தை தனக்கு செலுத்தியதாகவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தனது கணவருக்கு இளம் பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பெண்ணுக்காக என்னை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார் எனவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.

சமீபத்தில் குறித்த பெண்ணுக்கு உடல்நலப் பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு எச்.ஐ. வி தொற்றி இருப்பது தெரியவந்தது.

அதற்கமைய, குறித்த பெண் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு அளித்ததுடன், சந்தேக நபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவிக்கு எச்.ஐ.வி தொற்றிருப்பதை காரணமாக கூறி விவாகரத்து பெறும் முயற்சியில் சந்தேக நபர் இதை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles