2022 கால்பந்தாட்ட உலகக்கிண்ணமே தமது இறுதி உலகக்கிண்ண போட்டித் தொடராக இருக்கும் என்று ஆர்ஜன்டீனாவின் தலைவர் லியோனால் மெஸ்ஸி கடந்த ஒக்டோபர் மாதம் அறிவித்திருந்தார்.
ஆனால் இந்த முடிவை அவர் தற்போது மாற்றிக் கொண்டார்.
தாம் ஆர்ஜன்டீனா அணியிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்று மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
தாம் சாம்பியனாக தொடர்ந்தும் சர்வதேச போட்டிகளில் விளையாட எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024ம் ஆண்டு கோப்பா அமெரிக்கா தொடர் நடைபெறவுள்ள நிலையில், அதிலும் மெஸ்ஸி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.