எரிபொருள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த VAT வரி சலுகை நீக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவற்றினது விலைகள் மற்றும் கட்டணங்கள் மீண்டும் உயரும் என தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர்ப்பு வரி திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதையடுத்து, இந்த வரிச் சலுகை முடிவடைந்து விலைவாசி உயரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலை/கட்டண அதிகரிப்பானது குறைந்த பட்சம் 15% ஆக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.