சீமெந்து விலையை மேலும் 1000 ரூபாவால் குறைக்க முடியும் என தேசிய கட்டுமான ஒழுங்கமைப்பின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று 50 கிலோ சீமெந்து மூட்டையின் விலை 225 ரூபாவால் குறைக்கப்பட்டது.
சீமெந்து இறக்குமதியாளர்களின் மாபியாவினால் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது நேற்றைய விலைக் குறைப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் டொலர் நெருக்கடி இருக்குமானால், சீமெந்து இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள்.
சீமெந்து விலையை மேலும் 1000 ரூபாவால் குறைக்க முடியும் என தேசிய கட்டுமான ஒழுங்கமைப்பின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று 50 கிலோ சீமெந்து மூட்டையின் விலை 225 ரூபாவால்
குறைக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர் கூறிய கருத்துகள்:-
சீமெந்து இறக்குமதியாளர்களின் மாபியாவினால் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது நேற்றைய விலைக் குறைப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் டொலர் நெருக்கடி இருக்குமானால், சீமெந்து இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள்.
சீமெந்து மூட்டையின் விலையை மேலும் 1000 ரூபாவால் குறைக்கலாம். ஆனாலும் இறக்குமதியாளர்களால் அதிக விலைக்கு சீமெந்து விற்கப்படுகிறது.
விலைக் கட்டுப்பாட்டை நிர்ணயிப்பதன் மூலம் உள்ளூர் சீமெந்து உற்பத்தியாளர்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.