Friday, February 13, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்கள் சேவையை நிறைவேற்றாமைக்கு காரணம் கூறாதீர் - ஜனாதிபதி

மக்கள் சேவையை நிறைவேற்றாமைக்கு காரணம் கூறாதீர் – ஜனாதிபதி

அரச உத்தியோகத்தர்கள் மக்கள் சேவையை நிறைவேற்றாமைக்கு காரணங்களை கூற வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்படாமல் அதிகபட்ச பொது சேவையை வழங்குவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரச அதிகாரிகள் சட்டங்கள் மற்றும் கட்டளைகளை கேடயமாக பாவித்து நிறுவனங்களுக்கு சேவை செய்யாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பதுளை மாவட்ட செயலகத்தில் இன்று (15) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles