இறுக்கமான நாணயக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வீழ்ச்சிக்கு தள்ளியுள்ளதாக ப்ளூம்பேர்க் செய்தி சேவை முன்னெடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்துடன் ஆசியாவின் வேகமான பணவீக்கமும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இலங்கையின் பொருளாதார ஆழமாக வீழ்ச்சியடைக் கூடும் என ப்ளூம்பேர்க்கின் பொருளாதார வல்லுநர் அங்கூர் சுக்லா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் 10% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதிக பணவீக்கம் இதில் பிரதான தாக்கத்தை செலுத்தியுள்ளதாக ப்ளூம்பேர்க் தெரிவித்துள்ளது.