ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6,728 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்த சபையின் ஆராய்ச்சிப் பணிப்பாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலியில் நேற்று (14) இடம்பெற்ற வைபவம் ஒன்றில், பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஐஸ் போதைப்பொருள் பாவனையை பிரபலப்படுத்த சிலர் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருவதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.