Saturday, November 16, 2024
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாலைதீவுக்கு அனுப்புவதாகக் கூறி 197 பேரிடம் பண மோசடி

மாலைதீவுக்கு அனுப்புவதாகக் கூறி 197 பேரிடம் பண மோசடி

மாலைதீவுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி 197 தோட்டத் தொழிலாளர்களிடம் சுமார் 84 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாலைதீவில் புதிதாக நிர்மாணிக்கப்படும் சுற்றுலா ஹொட்டல்களில் வேலைக்கு தொழிலாளர்கள் அவசியம் எனவும் மாதாந்தம் ஒரு இலட்சத்து 83 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும் எனவும் கூறி பிளேக்வோட்டர்ஸ் தோட்டத்தில் வசிக்கும் 197 பேரிடம் தலா 30 ஆயிரம் ரூபா பணத்தை வாங்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பணத்தை பெற்றுக்கொண்ட அந்த தரகர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் தோட்டத்திற்கு சென்று நவம்பர் 15 ஆம் திகதி மாலைதீவுக்கு செல்ல வேண்டும் எனவும் அதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனவும் கூறி தொழிலாளர்களிடம் 12 ஆயிரத்து 500 ரூபாவை அறவிட்டுள்ளார்.

இரத்மலானையில் உள்ள மருத்துவ நிலையம் ஒன்றுக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்று மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டுள்ளார். மருத்துவ அறிக்கை பெற்றுக்கொண்ட பின்னர், தரகர் காணாமல் போனதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் உள்ள தங்க ஆபரணங்கள் அடகு வைத்தும் பெற்றோரின் ஊழியல் சேமலாப நிதியை என்பவற்றை கொண்டு தாம் 42 ஆயிரத்து 500 ரூபாவை தரகரிடம் செலுத்தியதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

தரகர் நவம்பர் 15 ஆம் திகதி மாலைதீவு செல்ல தயாராக இருக்குமாறு கூறியதால், தேவையான ஆடைகள் உட்பட வேறு பொருட்களை கொள்வனவு செய்ய மேலும் பணத்தை செலவிட நேரிட்டது எனவும் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ள நாவலப்பிட்டி பொலிஸார், தரகரை தேடி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles