ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த நட்டஈடு வழக்கில் 2வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 35(1)வது சரத்து பிரகாரம் ஜனாதிபதியின் விலக்குரிமை வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரசியலமைப்பு மற்றும் அவருக்கு எதிரான வழக்குகள் அவர் ஜனாதிபதியாக இருக்கும் காலத்திற்கு மாத்திரம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என நீர்கொழும்பு மாவட்ட நீதிபதி நுவன் தாரக இன்று (15) உத்தரவிட்டார்.
எவ்வாறாயினும், அந்த வழக்குகளின் பிரதிவாதிகள் அனைவருக்கும் எதிரான வழக்குகளை கைவிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் விடுத்த கோரிக்கையை நீர்கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி நிராகரித்துள்ளார்.