நியூஸிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பில் கேன் வில்லியம்சன் இருந்து விடுவிக்கப்பட்டுஇ டிம் சவுதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்
கேப்டன் பொறுப்பில் இருப்பதால், குறிப்பிட்ட இடத்திற்கான திறனை வெளிப்படுத்த இயலாத சூழலால், தனது விளையாட்டில் மேலும் கவனம் செலுத்த வேண்டியே கேப்டன் பொறுப்பை கைவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக டிம் சவுதி செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.