இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.
இதன்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தை வினைத்திறனாக அமைந்திருந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு இந்தியா எப்போதும் செவி சாய்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.