நாட்டில் நிலவுகின்ற எரிவாயு தட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
எரிவாயுவை சுமந்து வந்த கப்பல்களுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் யாவும் செலுத்தப்பட்டுள்ளன.
அதன்படி அந்த கப்பல்களில் இருக்கின்ற எரிவாயு தொகை தரையிறக்கப்பட்டு இன்று முதல் விநியோகிக்கும் பணிகள் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.