சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தை இலங்கை இந்த ஆண்டு ஏற்படுத்திக் கொண்டது.
ஆனால் அந்த கடனைப் பெற்றுக் கொள்வதற்கான முக்கிய பல படிகள் நிறைவேற்றப்பட வேண்டி இருப்பதால் அது இந்த ஆண்டு கிடைக்கப்பெறாது என்று சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய தகவல்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாதம் நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை இலங்கைக்குக் கடன் வழங்குவது குறித்து அவதானம் செலுத்தாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இலங்கைக்குக் கடன் வழங்கும் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் வரைக்கும் பிற்போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.