Friday, November 15, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடிந்துள்ளது - அமைச்சர் நளின்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடிந்துள்ளது – அமைச்சர் நளின்

சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தற்போது சாத்தியமாகியுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் வெளிச்சந்தையின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ​​நவம்பர் மாதத்திற்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவினால் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க முடிந்ததாக அவர் கூறினார்.

வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஜுலை மாதம் சதொசவில் காணப்பட்ட பல பொருட்களின் விலைகளை டிசம்பர் மாதத்திற்குள் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் பாதுகாப்புக்காக சந்தை கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை தொடருமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் அளவீட்டு அலகு நியமங்கள் சேவை திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், வருமானத்தைப் பெருக்கி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டம் இம்மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles