Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் ஆக்கப்பட்டோர் கொலை செய்யப்பட்டு விட்டனர் - இரா.சம்பந்தன்

காணாமல் ஆக்கப்பட்டோர் கொலை செய்யப்பட்டு விட்டனர் – இரா.சம்பந்தன்

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்று (13) நடைபெற்ற சர்வ கட்சி கூட்டத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளின் பின்னர் மறுசீரமைப்புக்கான சர்வ கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது.இந்த முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும்.

காணாமல் போனோர் அனைவரும் அரசாங்கத்தினால் கொல்லப்பட்டு விட்டார்கள். இனினும் அவர்கள் குறித்து போலியாகக் கதைத்து பிரயோசனம் இல்லை.

அவர்களுக்கு உண்மையில் என்னானது என்று விசாரணை நடத்தி அரசாங்கம் பொறுப்புக்கூற வழி செய்ய வேண்டும். இதுவே இப்போதைக்கு இடம்பெற வேண்டிய முக்கிய விடயமாகும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles