Tuesday, March 18, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார மீட்டர்களுக்கும் தட்டுப்பாடு

மின்சார மீட்டர்களுக்கும் தட்டுப்பாடு

மின்சார மீட்டர் மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு காரணமாக 35,000 புதிய மின் இணைப்புகளை வழங்க முடியவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

இதனால், புதிய மின் இணைப்பு பெற, டெபாசிட் செய்த மின் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

எவ்வாறாயினும், எமது விசாரணையில் கருத்து தெரிவித்த மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் [விநியோகப் பிரிவு 4] ரொஹான் சேனவிரத்ன, மின்சார மீட்டர் கம்பிகள் மட்டுமன்றி மின்மாற்றிகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார்.

300 முதல் 400 டிரான்ஸ்பார்மர்கள் தேவை என்றும், தற்போது 100க்கு மேல் மட்டுமே உள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்கள் இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இம்மாதம் 6000 மின்சார மீட்டர்கள் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles