Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2023 பெப்ரவரி இறுதியில் உள்ளூராட்சித் தேர்தல்?

2023 பெப்ரவரி இறுதியில் உள்ளூராட்சித் தேர்தல்?

24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகளுக்கு 8,327 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை இந்த மாத இறுதி வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் என அதன் ஆணையாளர் நாயகம் எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த வருடம் டிசம்பர் 26 முதல் 30ஆம் திகதி வரையில் அழைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டளைச் சட்டம் 2017 இன் விதிகளின்படி 2023 பெப்ரவரி பிற்பகுதியில் தேர்தல் நடத்தப்படும்.

வேட்புமனு தாக்கல் முடிந்து ஐந்து வாரங்கள் முதல் ஏழு வாரங்கள் வரை உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த காலம் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் இரகசிய முயற்சிகள் பற்றிய ஊகங்களை நிராகரித்த எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்குக் கூட இல்லை என்று கூறினார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் நிறைவுறுத்தப்பட்ட 2022 வாக்காளர் பதிவேடுஇ எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles