எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சிற்றுண்டி சாலைகளுக்கான உணவு விநியோகம் நாளை (17) முதல் நிறுத்தப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இன்று அறிவித்ததை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவான தீர்வை வழங்காவிடின், உணவகங்களில் பணியாற்றும் சுமார் 500,000 பேர் தமது வேலையை இழக்க நேரிடும்.
ஒரு சாதாரண உணவகத்தில் நாளொன்றுக்கு 2 முதல் 5 எரிவாயு கொள்கலன்கள் பயன்படுத்தப்படுவதுடன், எரிவாயு கொள்கலன்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நாளை (17) முதல் உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.