அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஆகியோருக்கு தடை விதிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவுக்குள் பிரவேசிப்பதற்கான தடைப் பட்டியலுக்குள் அவர்களின் பெயர்களை சேர்ப்பதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் கனேடிய பிரதமருக்கு மேலதிகமாக, அந்த இரு நாடுகளின் முக்கியமான அதிகாரிகள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டணி ப்ளின்கென், பாதுகாப்புச் செயலாளர் லியோட் அஸ்டின் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோரும் இந்த தடைப்பட்டியிலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக வொஷிங்டன் தடை விதித்தமைக்கு பதிலளிக்கும் வகையில், மொஸ்கோவின் நடவடிக்கை அமைந்துள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.