Wednesday, November 26, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக வைத்திருந்த 22 கிலோ தங்கம் சிக்கியது

சட்டவிரோதமாக வைத்திருந்த 22 கிலோ தங்கம் சிக்கியது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் 22 கிலோ கிராம் தங்கம் வைத்திருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து வந்த போதே விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 கிலோ தங்கத்தின் பெறுமதி 400 மில்லியன் ரூபாவாகும்.

இதன் போது தங்கம் நகைகள் மற்றும் 30 ஆடைகளில் தங்கம் பூசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று நபர்கள் டுபாயில் இருந்து சென்னைக்கு பயணித்து, பின்னர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர் என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles