இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி தற்போது பால் மா 450கிராம் பொதி ஒன்று 1,240 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
விலை அதிகரிப்பு சில நாட்களுக்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், தற்போதே இறக்குமதியாளர்கள் அதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.