Monday, July 21, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணத்தை குறைக்க சோலார் பேனல் திட்டம்

மின் கட்டணத்தை குறைக்க சோலார் பேனல் திட்டம்

அடுத்த வருடத்துக்கான மின் உற்பத்தித் திட்டத்துக்குத் தேவையான நிலக்கரியின் அளவு பிரச்சினையின்றி நாட்டில் பெற்றுக்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நிலக்கரி ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அதன் தலைவர் நலிந்த இலங்ககோன் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பாவனை மூலம் எதிர்வரும் 04 வருடங்களில் 2,500 மெகாவோட் மின் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

மேலும், மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் விரைவான நடவடிக்கையாக சோலார் பேனல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்சார சபையினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துகள் வெளியிடப்பட்டன

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles