Saturday, September 20, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலில் பயணச்சீட்டு இன்றி சென்ற வயோதிப பெண்ணின் அபராதத்தை செலுத்திய பொலிஸார்

ரயிலில் பயணச்சீட்டு இன்றி சென்ற வயோதிப பெண்ணின் அபராதத்தை செலுத்திய பொலிஸார்

நேற்று விகாரைக்கு செல்வதற்காக அங்கம்பிட்டியவில் இருந்து பாதுக்கவவுக்கு ரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 70 வயதுடைய வயோதிப பெண்ணுக்கு பாதுக்க நிலைய அதிபரினால் 3600 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாதுக்க பொலிஸார் அபராதத்தை செலுத்தி வயோதிப பெண்ணை விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண்ணின் பயணச்சீட்டின் பெறுமதி 40 ரூபா எனவும், பயணச்சீட்டு எடுக்க பணம் இல்லாத காரணத்தினால் பயணச்சீட்டு எடுக்காமல் ரயிலில் விகாரைக்கு வந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அபராதம் விதித்த ரயில் நிலைய அதிபர் சம்பவம் தொடர்பில் பாதுக்க பொலிஸாருக்கு அறிவித்ததுடன், வயோதிப பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்ட இந்த வயோதிப தாய்க்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் உணவு, பானங்கள் வழங்கி உபசரித்தது மட்டுமன்றி, அபராதமாக விதிக்கப்பட்ட 3600 ரூபாவையும் செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles