Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்நாட்டு வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் தொடர்பில் ஆராய நடவடிக்கை

உள்நாட்டு வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் தொடர்பில் ஆராய நடவடிக்கை

நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.

இதற்கான வேலை அனுமதிப்பத்திரத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறானதொரு முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

தற்போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக வெளிநாட்டு வேலைகளுக்காக வீட்டுப் பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தொழிலாளர் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், வீட்டு வேலை செய்பவர்களை கண்காணிக்கும் முறைமை இல்லாதது குறித்து அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதன் பிரகாரம், உள்ளூர் வீட்டுப் பணியாளர்களை விசாரிக்கும் முறைமை ஒன்றைத் தொகுக்குமாறு அமைச்சர் நாணயக்கார பணிப்புரை வழங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles