Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி இல்லை!

மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி இல்லை!

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக, இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள, கணக்கீடுகள் சரியானவையல்ல என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே தற்போதைய சந்தர்ப்பத்தில், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்போலதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

12 முறைமைகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டணம் தொடர்பில் இலங்கை மின்சார சபை கணக்கிட்டுள்ளது.

12 பில்லியன் ரூபா செலவில் நீர் மின்னுற்பத்தியின் ஊடாக 4,600 கிகாவோட் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என மின்சார சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதே அளவு மின்சாரத்தை எரிபொருளின் ஊடாக தயாரிப்பதற்கு 450 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையை கோருகின்றனர்.

தற்போதைய தரவுகளுக்கு அமைய நீர் மின்னுற்பத்தியின் ஊடாக 5,000 கிகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ள போதிலும் அடுத்த ஆண்டு 4,000 கிகாவோட் உற்பத்தி செய்ய முடியும் என அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் அடுத்த ஆண்டு 50 சதவீதமான மின்சாரத்தை எரிபொருளின் ஊடாக உற்பத்தி செய்வதற்கு இலங்கை மின்சார சபை எதிர்பார்ப்பதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே மின்சாரசபையின் கணக்கீடுகள் தவறானவை என்று ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles