Wednesday, November 26, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனவரி முதல் காகிதமில்லா மின்பட்டியல் – பற்றுச்சீட்டு

ஜனவரி முதல் காகிதமில்லா மின்பட்டியல் – பற்றுச்சீட்டு

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஜனவரி முதல் காகிதமில்லா மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் நாடளாவிய உயரதிகாரிகளுடனான இணையவழி சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, செலவினங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மின்சாரசபையின் செலவுகளைக் குறைக்க எடுக்கப்படக்கூடிய மேலதிக நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.

இதற்கமைய, காகிதமில்லா மின்பட்டியலை அறிமுகப்படுத்தல் தொடர்பிலும், தெரு விளக்குகளை முறையாக பொருத்துதல் மற்றும் இயக்குவதை ஒழுங்குபடுத்தல் குறித்தும் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளி சேவைகள் மற்றும் இலங்கை மின்சார சபையால் செய்ய முடியாத வேலைகளை உள்ளூராட்சி சபைகளின் ஆதரவுடன் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles