ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் யுக்ரைனுக்கு இதுவரை 500 பில்லியன் டொலருக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக யுக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்குப் பின்னர் யுக்ரைனின் புனரமைப்புக்கான நிதியை ரஷ்யா செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்துவதன் மூலம் அந்த நிதியை பெற்றுக் கொள்ள முடியும் என யுக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார்.
யுக்ரைன் நட்பு நாடுகளிடமிருந்தும் நிதியுதவி பெற்றுக் கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்