பெரும் போகத்திற்கான மியூரேட் ஒஃப் பொட்டாஷ் (MoP) உரத்தை விவசாயிகளுக்கு வழங்கும் பணியை அரசாங்கம் இன்று முதல் முன்னெடுக்கிறது.
41,876 மெட்ரிக் டன் MoP உரம் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அதன்படி இன்று முதல் விவசாயிகளுக்கு உர இருப்புக்கள் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த சில நாட்களில் விவசாயிகளுக்கு 16, 500 மெட்ரிக் டன் யூரியா உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.