வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சிறுவன் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலியந்தலை – மாம்பே ஜய மாவத்தையை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தனது மகன் சிக்கியிருந்ததைக் கண்டுள்ளார்.
சிறுவன் மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கல்கிசை குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.