உலகிலேயே செலவு குறைந்த நகரங்களில் கொழும்பு இடம்பிடித்துள்ளது.
வருடாந்த Economist Intelligence Unit (EIU) கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் பெங்களூர் மற்றும் அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்ஸுடன் உலக வாழ்க்கைச் செலவுக் குறியீட்டில் கொழும்பு 161ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
EIU இன் உலக வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின்படி, இந்தியாவின் சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்கள் கொழும்பிற்குக் கீழே தரவரிசையில் உள்ளன, அதே நேரத்தில் ஈரானின் தலைநகர், தெஹ்ரான், லிபியத் தலைநகர், திரிபோலி மற்றும் சிரியாவின் டமாஸ்கஸ் ஆகியவை உலகின் மலிவான நகரங்களாக உள்ளன.
இதற்கிடையில், உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் கூட்டாக நியூயோர்க் மற்றும் சிங்கப்பூர் என வருடாந்த பொருளாதார புலனாய்வு பிரிவு (EIU) கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.