இலங்கை துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டறிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நியமிக்கப்பட்ட குழுவில் மூவர் உள்ளனர்.
குழு உறுப்பினர்களாக எம்.டி.எஸ்.ஏ. பெரேரா, காமினி குமாரசிறி மற்றும் கே.ஜி.பி.வசந்த கமகே. துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய தரப்பினரும் இந்தக் குழுவில் இடம்பெற்றதாகக்கூறப்படுகின்றது.
குழுவுக்குக் கிடைத்த புகார்கள் அனைத்தையும் விசாரித்து, குழுவின் அறிக்கை 6 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன் சந்திர தெரிவித்துள்ளார்.