மெதகம, மீகஹவத்துர பகுதியில் உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரினால் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றிரவு (15) இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில், மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
45 வயதான இவர் மெதகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.