Saturday, December 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு15 வயது சிறுவனுடன் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியைக்கு விளக்கமறியல்

15 வயது சிறுவனுடன் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியைக்கு விளக்கமறியல்

15 வயது மாணவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக ஹொரணை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் இம்மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹொரணை பதில் நீதவான் நளின் இம்புல்கொட இந்த உத்தரவை பிறப்பித்தார்.

42 வயதான 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதாகவும், தாயின் சகோதரியின் பாதுகாப்பில் அவர் வளர்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவனின் சித்தி வீடு திரும்பும் போது குறித்த ஆசிரியை மாணவனை முத்தமிடுவதை கண்டுள்ளார். எனினும் அந்த நொடி எதுவும் கூறாமல் நடந்ததை தன் சகோதரியிடம் தொலைபேசி ஊடாக ஒப்பித்துள்ளார்.

தாயின் ஆலோசனையின் பேரில், மாணவின் கைப்பேசியை பரிசோதித்த சித்தி, உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை அன்பே. உன் மீது நல்ல வாசனை’ போன்ற காதல் வார்த்தைகளை பயன்படுத்தி ஆசிரியர் மாணவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதை கவனித்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles