Friday, November 15, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமார்ச்சில் 14 மணிநேர மின் துண்டிப்பு ஏற்படலாம் - உதய கம்மன்பில

மார்ச்சில் 14 மணிநேர மின் துண்டிப்பு ஏற்படலாம் – உதய கம்மன்பில

அடுத்த வருடம் பாரிய மின்சார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இதனை அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் வறட்சியான காலப்பகுதியாகும். இந்த காலப்பகுதியில் மின்னுற்பத்தி மையங்களுக்கான நீரேந்தும் பகுதிகளில் வறட்சி ஏற்படும்.

இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பெரும் மின்சார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும்.

மார்ச் மாதம் 12-14 மணிநேர மின் துண்டிப்பினை தவிர்க்க முடியாது போகும்.

கடந்த அரசாங்க காலத்திலும் தாம் இவ்வாறான எச்சரிக்கையை விடுத்த போதும்இ அந்த அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. அதனாலேயே தற்போது இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles