Sunday, July 27, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு இன்மையால் உயிரை மாய்த்துக் கொண்ட வயோதிப பெண்

உணவு இன்மையால் உயிரை மாய்த்துக் கொண்ட வயோதிப பெண்

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் உணவு இல்லாது தவித்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரநாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி திரவத்தை குடித்த குறித்த பெண் நேற்று (01) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகல, பொஸ்ஸெல்ல, 55 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் 75 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது 73 வயதான வயோதிப கணவருடன் வசித்து வருவதாகவும்இ அவர்களது, ஒரே மகள் ரம்புக்கனைஇ கப்பல பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முதிய தம்பதிக்கு உழவர் ஓய்வூதியமாக ரூ.1,950, நீண்ட கால உதவித்தொகையாக ரூ.1,900 என மொத்தம் ரூ.3,850 வருமானம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

எனினும் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த தொகை போதுமானதாக இன்மையால், குறித்த பெண் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles