உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை, இன்று மேலும் குறைவடைந்துள்ளது.
இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 98 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் அதன் விலை, 100 டொலர் அளவில் காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக, ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்ற நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.