ஒவ்வொருவருக்கும் சமுர்தி என்ற நிவாரண கொடுப்பனவை வழங்க பணமில்லை எனவும், சமுர்தி பெறுவதற்கு தகுதியற்றவர்களை நீக்கினால், தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (01) நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
‘நாம் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்ப வேண்டும். எடுக்கப்படும் முடிவுகள் பிரபலமாக இருக்காது. ஆனால் நாடாளுமன்றம் அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்றார்