Thursday, September 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிட்ரோ வழக்கில் ஜனாதிபதியின் பெயர் - சட்டமா அதிபர் ஆட்சேபனை

லிட்ரோ வழக்கில் ஜனாதிபதியின் பெயர் – சட்டமா அதிபர் ஆட்சேபனை

லிட்ரோ எரிவாயு டெண்டருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் ஜனாதிபதியை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் , அரசியலமைப்பின் 35(1) சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என சுட்டிக்காட்டினார்.

நாகானந்த கொடித்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணை ஜனவரி 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மனுதாரர் தனது மனுவில், லிட்ரோ காஸ் டெண்டர் வழங்காததில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அந்த டெண்டரை செல்லாது என உத்தரவிடக்கோரி தாக்கல் செய்திருந்தார்.

நாகானந்த கொடித்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், சட்டமா அதிபர், லிட்ரோ கேஸ் குழுமத்தின் பணிப்பாளர் சபை உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles