Tuesday, March 18, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

அரச ஊழியர்களைப் போன்று ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாமல் மாணவர்களின் தேவைகளை கருத்திற் கொண்டு அவர்களை உரிய முறையில் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் கல்விக்கான பிரதான திட்டத்தின் வரைவு சமர்ப்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரச ஊழியர்களை இடமாற்றம் செய்வது போன்று ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்தால் பிள்ளைகளுக்கான பாடங்களை உள்ளடக்குவதில் சிக்கல்கள் ஏற்படும்.

நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத காரணத்தால் வேலைவாய்ப்பு, ஆசிரியர் சங்கங்கள், இடமாறுதல் சபை முரண்பாடுகள் என பல நிர்வாக சிக்கல்கள் எழுந்துள்ளது.

தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு நீண்ட காலமாக இருந்தும், அது முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. அடுத்த தொழில் புரட்சியை எதிர்கொள்ளும் தருவாயில், தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கியுள்ளோம்.

எதிர்காலத்தில் சீர்திருத்தங்களுக்கு அப்பால் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மேலும் பல நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles