Wednesday, March 19, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டா - மஹிந்தவின் வெளிநாட்டு விஜயங்களுக்காக 44 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது

கோட்டா – மஹிந்தவின் வெளிநாட்டு விஜயங்களுக்காக 44 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் 2021ஆம் ஆண்டு மாத்திரம் 5 வெளிநாட்டு விஜயங்களுக்கு 44 மில்லியன் ரூபாவுக்கும் (44,739,184.91) அதிக தொகையை செலவிட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2021ஆம் ஆண்டு 2 வெளிநாட்டு விஜயங்களுக்கு 36 மில்லியன் ரூபாவை (36,970, 864.14) செலவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 3 வெளிநாட்டு விஜயங்களுக்கு சுமார் 7 மில்லியன் ரூபாவை (7,768,320.77) செலவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ விஜயங்களுக்கான செலவு மொத்த செலவில் 83 சதவீதமாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021ஆம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.

அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் மற்றும் இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

Daily Mirror

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles